வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
1991ம் ஆண்டு ‛வைதேகி வந்தாச்சு' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் சரவணன். அதன் பிறகு ‛பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, மாமியார் வீடு, பார்வதி என்னை பாரடி, முத்துப்பாண்டி' உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். 2003ல் நடித்த ‛தாயுமானவன்' படத்திற்கு பிறகு அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் இல்லை.
இதன் காரணமாக அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான ‛பருத்திவீரன்' படத்தில் அவருக்கு சித்தப்பாவாக செவ்வாழை என்ற கேரக்டரில் நடித்திருந்தார் சரவணன். அதன்பிறகு தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நடிகர் விஜய் தனது பெயருக்கு முன் போட்டுக் கொள்ளும் இளைய தளபதி பட்டத்துக்கு சொந்தக்காரனே நான்தான். நான் ஹீரோவாக நடித்து வந்தபோது சேலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது திமுகவைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம்தான் எனக்கு இளைய தளபதி என்ற பட்டத்தை சூட்டினார். அதன் பிறகு நான் நடித்த படங்களில் இளைய தளபதி சரவணன் என்றுதான் டைட்டில் கார்டு போடப்பட்டது.
ஆனால் நடிகர் விஜய் நடிக்க தொடங்கிய போது ஒரு படத்தில் அவரது பெயருக்கு முன்பு இளைய தளபதி பட்டத்தை போட்டிருந்தார்கள். அதையடுத்து நான் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திர சேகரனை தொடர்பு கொண்டு அது குறித்து கேட்டபோது, உனக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகள் வந்தால் அந்த இளைய தளபதி பட்டத்தை விஜய் பயன்படுத்த மாட்டார் என்று கூறியிருந்தார். ஆனால் அதையடுத்து எனக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என்பதினால் அந்த பட்டத்தை விஜய்யே பயன்படுத்தி கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்'' என தெரிவித்திருக்கிறார் நடிகர் சரவணன்.