பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
மே 1ம் தேதியன்று சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள 'ரெட்ரோ' படமும், சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படமும் நேரடி தமிழ்ப் படங்களாக வெளியாகின்றன. நானி நடித்துள்ள தெலுங்கு டப்பிங் படமான 'ஹிட் 3' படமும் இங்கு வெளியாகிறது.
இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்தப் படங்களுக்கான முன்பதிவு ஆன்லைன் தளங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தியேட்டர்கள் கணக்கைப் பொறுத்தவரையில் 'ரெட்ரோ' படத்திற்கு அதிக தியேட்டர்களும் காட்சிகளும், 'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்குக் குறைவான தியேட்டர்கள், காட்சிகளும்,. 'ஹிட் 3' படத்திற்கு மிகவும் குறைவான தியேட்டர்கள், காட்சிகளே கிடைத்துள்ளன. இந்தப் படம் 'ஏ' சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளுடன் சென்று பார்க்க வாய்ப்பில்லை.
தற்போதைய நிலவரப்படி 'ரெட்ரோ' படத்திற்கான முன்பதிவு குறிப்பிடும்படி அமைந்துள்ளது. சில தியேட்டர்களில் முதல் நாளுக்கான காட்சிகள் பலவும் நிறைந்துள்ளன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் குறிப்பிடும்படி முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்கு திரையுலகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் படம் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்று சொல்லி வருகிறார்கள். விமர்சனங்கள் வந்த பிறகு, ரசிகர்கள் பார்த்த பிறகு படம் பற்றிய 'பாசிட்டிவ் டாக்' பரவ வாய்ப்புள்ளது.
'ஹிட் 3' படத்திற்கு ஆந்திரா, தெலங்கானாவில் நல்ல முன்பதிவு உள்ளது. தமிழைப் பொறுத்தவரையில் மிகவும் குறைவான அளவில்தான் இருக்கிறது. படம் பார்த்த பிறகு வேண்டுமானால் இதன் பேச்சு பரவலாம். தெலுங்கில் 'ஹிட் 3' போட்டியை 'ரெட்ரோ' சமாளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தப் படங்கள் கதையம்சத்துடன், சுவாரசியத்துடன் அமைந்துவிட்டால் இந்த விடுமுறை நாட்களில் வசூலைப் பெறலாம்.