தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மலையாள நடிகையாக மாளவிகா மோகனன் தமிழில் ‛பேட்ட' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பது போன்று முகமூடி அணிந்து, நல்ல பெயரை வாங்கி கொள்கிறார்கள். 5 ஆண்டுகளில் அப்படி முகமூடி அணிந்த பலரை பார்த்துள்ளேன். எந்த நேரத்தில் பெண்களை மதித்து பேசணும் என அவர்களுக்கு தெரியும். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படி மாறுவார்கள் என கண்கூடாக பார்த்துள்ளேன். ஆண், பெண் பேதம் சினிமாவில் இன்னமும் வேரூன்றி உள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை'' என்றார்.