துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் 'நான் அடிமை இல்லை'. படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற ‛ஒரு ஜீவன்தான் உன்னோடுதான் ஓயாமல் ஒலிக்கின்றதே...' என்ற பாடல் இன்றைக்கு மனதை உருக்கும் கீதமாக காற்றில் உலவிக் கொண்டிருக்கிறது. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் விஜய் ஆனந்த் என்கிற ஜீவனை சினிமா மறந்து விட்டது.
விசு இயக்கத்தில் 1984-ல் வெளியான 'நாணயம் இல்லாத நாணயம்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக விஜய் ஆனந்த் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்தார். ஊருக்கு உபதேசம், வெற்றி மேல் வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, காவலன் அவன் கோவலன், உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கன்னட திரைப்படங்களையும் சேர்த்து 180க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி 2 ஆங்கில ஆல்பம் பாடலுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
இப்படி தொடர்ந்து இசை அமைத்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் நின்று போனது. பல வருடங்கள் வீட்டில் முடங்கி கிடந்தவர் கடந்த ஆண்டு தனது 71வது வயதில் காலமானார். அவர் மரண செய்தி கூட சில வரி செய்திகளாக கடந்து போனது.