5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதில் நடவடிக்கையாக 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்து இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை நடத்தினர். இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த்
“போராளியின் சண்டை ஆரம்பமாகிவிட்டது. பணி முடியும் வரை நிறுத்த வேண்டாம். மொத்த நாடும் உங்களுடன் உள்ளது,” என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 'டேக்' செய்து தனது ஆதரவைத் ரஜினி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாத செயல்களால் பிளவுபடாத ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான மற்றும் திறன்மிக்க ராணுவ நடவடிக்கையை நான் மெச்சுகிறேன். ஜெய்ஹிந்த்,” என முப்படையினரின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து கமல் பாராட்டியுள்ளார்.
விஜய்
நடிகரும், தவெக தலைவருமான விஜய், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
“இந்திய ராணுவனத்தின் முகம் இதுதான்… ஜெய்ஹிந்த்,” என 'ஆபரேஷன்சிந்தூர்' ஹேஷ்டேக்கையும் இணைத்து சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
ஏஆர் ரஹ்மான்
வார்த்தைகளில் எதுவும் குறிப்பிடாமல், புறா, ஹாட்டின், தேசியக்கொடி ஆகியவற்றை எமோஜி வடிவில் இசையமைப்பாளர் ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
தனுஷ்
பயங்கரவாதத்திற்கு எதிராக நமது நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. நமது ஆயுதப் படைகளை நினைத்து பெருமை கொள்வோம், ஜெய்ஹிந்த்,” என தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இளையராஜா
மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி... ஆபரேஷன் சிந்தூர் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.