தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்'. பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள இந்தப்படத்தில். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க, ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 16ம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் வெளியான 'ஹிருதயம்' படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது அதில் பேசிய நாயகன் சூரி, இசையமைப்பாளரிடம் படக்குழுவினர் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார். காரணம் என்ன தெரியுமா?
இது குறித்து சூரி கூறும்போது, ''பல படங்களுக்கு படம் ஆரம்பித்த பின்னர் இசையமைப்பாளர்களை எங்கே என்று தேட வேண்டிய சூழலில், இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப்பை படக்குழுவினர் அனைவருமே எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. சொல்லப்போனால் கடைசி நேரத்தில் அவருக்கு நிறைய தொந்தரவு கொடுத்து விட்டோம். கடைசி நேரத்தில் ஒரு பாடல் தேவை என்று இயக்குனர் கேட்டார். கவலை வேண்டாம் போட்டுத் தருகிறேன் என்று அவர் சொன்னார். கொஞ்ச நேரம் கழித்து உதவி இயக்குனர் ஒருவர் போன் பண்ணி இந்த பாடல் குறித்து கேட்டார், அவருக்கும் அதே பதிலை தான் கூறினார்.
ஒரு கட்டத்தில் எனக்கு போன் செய்த இசையமைப்பாளர், எல்கே என்பவர் யார் என்று கேட்டார். இயக்குனரின் கடைசி அசிஸ்டன்ட் அவர் என்று நான் கூறினேன். நள்ளிரவு 2 மணிக்கு என்னை எழுப்பி அந்த பாடல் குறித்து கேட்கிறார். அவர் போனை வைத்ததும் இரண்டரை மணிக்கு படத்தின் எடிட்டர் அந்த பாடலை பற்றி என்னிடம் பேசுகிறார். இன்னும் இயக்குனரின் கார் டிரைவர் மட்டும்தான் என்னிடம் பேசவில்லை என்று நகைச்சுவையாக இசையமைப்பாளர் என்னிடம் கூறினார். உங்கள் பாடல்களை கேட்பதற்கு நாங்கள் அத்தனை பேரும் ஆவலாக இருந்தோம் என்பது தான் அதற்கு காரணம். இருந்தாலும் அவரை தொந்தரவு செய்ததற்காக படக்குழுவினர் சார்பாக அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று சூரி கூறினார். சூரி பேசப்பேச அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.