சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி நடிப்பில் வெளிவந்த 'தளபதி' படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரப் பெயர் தேவா. ரஜினியின் பெயர் சூர்யா. அப்படம் வெளிவந்து 33 ஆண்டுகள் ஆனாலும் தேவா, சூர்யா பெயர்கள் ரஜினி ரசிகர்களுக்கு மறக்க முடியாத பெயர்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தில் அவருடைய கதாபாத்திரப் பெயர் தேவா. 'தளபதி' படத்தில் பிரபலமான ஒரு பெயர் 'தேவா' என்பதால் அந்தப் பெயரையே 'கூலி' படத்தில் ரஜினிக்காக வைத்திருக்கலாம் லோகேஷ். ரஜினியின் பெயரை சூர்யா என இப்போது வைத்தால் அரசியல் என சொல்லவும் வாய்ப்புண்டு.
இதனிடையே, ரஜினியின் முன்னாள் மருமகனும் நடிகருமான தனுஷ் நடித்து ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ள 'குபேரா' படத்தில் தனுஷின் கதாபாத்திரப் பெயரும் தேவா என்பது நேற்று வெளியிட்ட போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.
இது யதேச்சையாக நடந்திருக்கவே வாய்ப்புள்ளது. 'குபேரா' படத்தின் படப்பிடிப்பை 'கூலி' படத்திற்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் அடுத்தடுத்து வெளியாக உள்ள இருவரது கதாபாத்திரப் பெயர்களும் ஒன்றாக இருப்பது ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு வர வாய்ப்புள்ளது.