சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள படம் மாமன். இந்த படம் மே 16ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள கல்லாளியே கல்லாளியே என்ற வீடியோ பாடல் வெளியாகியிருக்கிறது. படத்தின் புரமோஷனுக்காக திருப்பூரில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் சூரியும், ஐஸ்வர்யா லட்சுமியும் பங்கேற்றுள்ளார்கள்.
அப்போது பேசிய சூரி, ‛‛எனக்கு 14 வயது இருக்கும்போது இதே திருப்பூரில் பனியன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்தேன். அப்போது நான் ஒரு தேங்காய் பன்னுக்காக அலைந்தேன். ஆனால் இன்று அதே திருப்பூரில் எனக்கு இந்த கல்லூரியில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெருமை என்ன இருக்க முடியும். தொழிலாளர்களால் உயர்ந்த ஒரு ஊர் என்றால் அது திருப்பூர்தான். இந்த ஊரில் உருவாகும் ஆடைகளை உடுத்துக் கொள்வதே பெருமையான விஷயம். எனது வாழ்நாளில் இந்த திருப்பூரை மறக்கவே முடியாது. அன்றைக்கு இதே திருப்பூரில் ஒரு சிறுவனாக வேலை செய்தேன். இன்றைக்கு நான் நடித்துள்ள ஒரு படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடக்கிறது. இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்.
கடுமையாக உழைத்தாலே வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என்பதை நிரூபிக்கும் ஊர்தான் இந்த திருப்பூர். எனது வளர்ச்சிக்கு காரணம் என்னுடைய உழைப்பு தான். கடுமையான உழைப்புக்கு பிறகுதான் உயர்ந்திருக்கிறேன். ஆனால் மற்றவர்களை போன்று தரையில் இருந்து நான் வளரவில்லை. தரைக்கு கீழே இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இதற்காக நம்பிக்கையுடன் கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்பு தான் இன்றைக்கு இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்று பேசினார்.
சூரி நெகிழ்ச்சியாக பேசும்போது இடையே கண் கலங்கினார்.