நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
50 படங்களுக்கு மேல் இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முதல் படம் 'புரியாத புதிர்'. இதனை சூப்பர் குட் ஆர்.பி.சவுத்ரி தயாரித்தார். இதை தொடர்ந்து அடுத்தும் ஒரு படம் இயக்குமாரு ஆர்.பி.சவுத்ரி, கே.எஸ்.ரவிகுமாரை கேட்டுக் கொண்டார். அப்போது ரவிகுமாரிடம் கைவசம் கதை இல்லை. அப்போது சவுத்ரி அலுவலகத்தில் இருந்த ஈரோடு சவுந்தர் ஒரு கதை சொன்னார். அதில் அக்கா - தம்பி மோதல் இருந்தது. இதனை மாற்றி அண்ணன், தம்பி மோதலாக்கி உருவான படம்தான் 'சேரன் பாண்டியன்'.
படத்திற்கு இசை அமைப்பாளர் தேடியபோது அதே அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு இசை அமைப்பாளர் சவுந்தர்யனும் வந்திருந்தார். சவுத்ரி, ரவிகுமாரை அழைத்து "அந்த பையன் ஏதோ சில பாட்டு வச்சிருக்கான் கேளு, பிடிச்சிருந்தா அந்த பையனை யூஸ் பண்ணிக்கோ" என்றார். உடனே சவுந்தர்யனை அழைத்து பாடல்களை கேட்டார். உடனே மேஜையில் தாளம் போட்டபடி சவுந்தர்யன் பாடினார்...
'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா, வந்ததா வசந்தம் வந்ததா' என்று பாடினார். பாடலை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிகுமார் அவர் கையில் இருந்த எல்லா பாடலையும் பாடச்சொன்னார். 13 பாடல்களை பாடினார் சவுந்தர்யன். அதில் 7 பாடல்களை தேர்வு செய்தார் ரவிகுமார். சவுத்திரியும் அதே பாடல்களை தேர்வு செய்தார்.
பின்னர் அந்த பாடல்களுக்கு ஏற்ப திரைக்கதையை மாற்றி அத்தனை பாடல்களையும் அந்த படத்தில் வைத்தார். கண்கள் ஒன்றாக கலந்ததா, சம்பா நாத்து கதிராச்சு... சின்ன தங்கம் என் செல்ல தங்கம் ஏன் கண்ணு கலங்குது உள்ளிட்ட அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. பாடல்கள் படத்தை ஹிட்டாக்கியது.