நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தெலுங்கு நிறுவனத் தயாரிப்பு, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜுன் 20ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ள படம் 'குபேரா'.
தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. சுமார் 20 கோடி வரை கொடுத்து வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என்று சொல்லப்பட்டாலும், இந்தப் படத்தை தெலுங்குக் காட்சிகளாகவே அதிகம் எடுத்திருப்பார்கள் என்ற ஒரு சந்தேகம் நிலவுகிறது. சமீபத்தில் வெளியான 'போய் வா நண்பா' பாடலில் கூட தெலுங்கு வாயசைவுதான் இருந்தது. தெலுங்குப் பாடலை விட தமிழ்ப் பாடலுக்குத்தான் அதிகப் பார்வைகள் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
தனுஷ் நடித்து இதற்கு முன்பு தமிழ், தெலுங்கு என்று சொல்லி வெளிவந்த 'வாத்தி' படத்தில் தெலுங்கு வாடைதான் அதிகம் இருந்தது. அது போலவே 'குபேரா' படத்திலும் இருந்தால் தமிழ் ரசிகர்களைக் கவர்வதில் சிரமம் இருக்கும். இதை படக்குழுவினரும், வினியோகஸ்தரும் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்.