தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மதுரை வந்த நடிகர் விஷால், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும்? அப்புறம் எங்க அம்மா என்னை வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க, அதை அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006ல் ‛திமிரு' பட சூட்டிங்கின்போது மதுரை வந்தேன், 19 வருஷம் கழிச்சு இப்போ வந்திருக்கிறேன். மனதார வேண்டிக் கொண்டேன்.
நடிகர் சங்க கட்டடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டடம் பெரிசாக வந்துவிடும். இந்தியா -பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; இதை தவிர்த்து இருக்கலாம். நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை.
மதுரை மக்கள் இரு விஷயத்துல மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம். மற்றொன்று உணவு. இந்த இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசமும் சிரிப்பும் அவர்களிடம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.