தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
பான் இந்தியா இயக்குனரான ராஜமவுலி படத்தைப் பார்த்துவிட்டு எக்ஸ் தளத்தில், “அற்புதமான 'டூரிஸ்ட் பேமிலி' படத்தைப் பார்த்தேன். மனதைத் தொடும், விலா எலும்புகளை நோக வைக்கும் நகைச்சுவை நிறைந்த படம். ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் ரசிக்க வைத்தது. அபிஷன் ஜீவிந்த் எழுதிய சிறந்த எழுத்து மற்றும் இயக்கம். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்திற்கு நன்றி, தவறவிடாதீர்கள்,” எனப் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் என சொல்லப்படும் சிலர் பாராட்டுவதற்கு முன்பாகவே ராஜமவுலி பாராட்டியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிட வேண்டியது.
அவரது பாராட்டிற்கு 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன், “இன்னும் நம்ப முடியாமல் தவிக்கிறேன். அவருடைய படங்களை என் கண்களில் நட்சத்திரங்களுடன் பார்த்தேன். அந்த உலகங்களை உருவாக்கிய மனிதன் ஒரு நாள் என் பெயரைப் பேசுவார் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. சார், நீங்கள் இந்த பையனின் கனவை, வாழ்க்கையை பெரிதாக்கிவிட்டீர்கள்,” என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.