தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மாரடைப்பால் காலமான நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரது பெற்றோர், மனைவி அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் மாரடைப்பால் திடீரென நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சென்னை, ராமாபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், வி.சி.க., தலைவர் திருமாவளவன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி, இளையராஜா, பார்த்திபன், சத்யராஜ், சிவகுமார், விஷால், நாசர், கார்த்தி, அஜய் ரத்னம், வையாபுரி, எம்எஸ் பாஸ்கர், பேரரசு, மோகன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ராஜேஷின் மகள் கனடாவில் இருந்து இன்று அதிகாலை தான் சென்னை திரும்பினார். பிரபலங்கள் அஞ்சலிக்கு பின் இறுதி அஞ்சலி சென்னை அசோக் நகரில் உள்ள தேவாலயத்தில் நடந்தது. இதையடுத்து மாலை 3 மணிக்கு மேல் ராஜேஷின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது பெற்றோர், மனைவி கல்லறை அமைந்துள்ள இடத்திலேயே ராஜேஷின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக ராஜேஷ், உயிரோடு இருக்கும் போதே தனக்கான கல்லறையை கட்டி வைத்திருந்தார். தனது உடல் அடக்கம் இப்படிதான் நடக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படியே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.