பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
வீர தீர சூரன் படத்தை அடுத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார்-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த நிலையில், தெலுங்கில் 2024ம் ஆண்டு நானி நாயகனாக நடித்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் வில்லனாக நடித்திருத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆக்ஷன், திரில்லர் கதையில் உருவான இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்தார். இதில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு தெலுங்கானா அரசு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கியுள்ளது. இதையடுத்து அவருக்கு நானி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தி பதிவிட்டு இருந்தார்.
அதில் , வாழ்த்துக்கள் சார் இந்த படத்தில் நீங்கள் சிறந்த துணை நடிகர் மட்டுமல்ல, எல்லாமே நீங்கள்தான். இந்த விருதை பெறுவதற்கு முழு தகுதி பெற்றவர் என்று ஒரு பதிவு போட்டார். ஆனால் அதற்கு எஸ்.ஜே.சூர்யா, மிக்க நன்றி நானி சார் என்று ஒரு பதில் கொடுத்தார்.
அந்த பதிவு முழுமையாக இல்லை என்று சொல்லி மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் எஸ்.ஜே சூர்யா. அதில், மன்னிக்கவும் நானி சார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் உங்களது பாராட்டு செய்திக்கு என்னால் உரிய பதிலை அளிக்க இயலவில்லை. காரணம் நன்றி என சொல்வது மட்டும் போதாது. நீங்களும், இயக்குனர் விவேக்கும் எனக்கு முழு ஆதரவாக இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த பயணம் சாத்தியமில்லை. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நீங்கள் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கிறீர்கள் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.