பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ் | சினிமா விழாக்களில் அரசியல்வாதிகள் : கோலிவுட்டில் புது டிரெண்ட் | பிளாஷ்பேக்: சென்னை மாகாணத்தை முதன் முதலில் 'தமிழ்நாடு' என்று அழைத்தது சினிமா | தீவிர முருக பக்தர் யோகிபாபு | பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! |
மதயானை கூட்டம், ராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை கூறிவிட்டு சென்னை திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சென்னை வந்தார். மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். பாலுமகேந்திராவுக்குப் பின் வெற்றிமாறனுடம் இணைந்து பணியாற்றி வந்த இவர், பொல்லாதவன், கிடாரி போன்ற படங்களில் நடித்தார். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுத உதவினார்.
நீண்ட போராட்டத்திற்கு பின் கதிர், ஓவியா நடித்த மதயானை கூட்டம் படத்தை இயக்கினார். தென் தமிழகத்தில் இந்தப் படம் ஓரளவுக்கு பேசப்பட்டது. தொடர்ந்து சாந்தனு பாக்யராஜின் இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அடுத்து பேரும் போரும் என்ற படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூறிவிட்டு திரும்பும் போது மாரடைப்பால் மரணம் ஏற்பட்டது. இவரின் திடீர் மரணம் திரையுலகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ளனர். அவரது உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.
மே 29ம் தேதி தான் நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் திடீரென காலமானார். இந்த சோகம் மறையும் முன்பே விக்ரம் சுகுமாரனின் மறைவு திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.