தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் 'ராஜா சாப்' எனும் படம் உருவாகி வருகிறது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். தமன் இசையமைக்க, பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ், திகில் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. முதன்முறையாக இப்படியொரு படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.
இப்படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகுவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தினால் இத்திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து தள்ளி ஒரு சில மாதங்கள் கழித்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜா சாப் திரைப்படம் இவ்வருட இறுதியில் டிசம்பர் 05ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் ஜுன் 16ல் வெளியிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக 'தி ராஜா சாப்' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.