தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'ராஜாசாப்'. பான் இந்தியா படமாக ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் நடித்து 2023ல் வெளிவந்த 'ஆதிபுருஷ்' படத்தை ஹிந்தியில் வெளியிட்ட எஎ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப் பட வெளியீட்டால் அந்நிறுவனத்திற்கு நிறையவே நஷ்டம். எனவே, அவர்கள் தயாரிக்கும் 'ராஜாசாப்' படத்திற்காக தன்னுடைய சம்பளத்திலிருந்து 50 கோடியை பிரபாஸ் குறைத்துக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் பிரபாஸ் என்கிறார்கள். இந்தப் படத்துடன் 'பாஜி, ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2' ஆகிய படங்கள் பிரபாஸ் கைவசம் உள்ளன.