கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
தென்னிந்திய அளவில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக எப்போதும் பிஸியான நடிகையாக நடித்து வருபவர் நடிகை ஊர்வசி. கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஊர்வசி, கடந்த 2000ல் நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2008ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களுக்கு தேஜா லட்சுமி என்கிற மகள் இருக்கிறார். மனோஜ் கே ஜெயன், ஆஷா என்பவரை திருமணம் கொண்டார். தேஜா லட்சுமி தற்போது தனது தந்தையுடன் தான் இருக்கிறார். இந்த நிலையில் மலையாளத்தில் 'சுந்தரியாய ஸ்டெல்லா' என்கிற படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் தேஜா லட்சுமி. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் கே ஜெயன், “தேஜா லட்சுமி தனக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது என்று முதன் முதலில் என் மனைவி ஆஷாவிடம் தான் கூறினார். ஆஷா அவரது அம்மாவாக மட்டும் அல்ல.. நல்ல தோழியும் கூட. இருந்தாலும் தேஜா லட்சுமி அவரது அம்மா ஊர்வசியிடம் தனது விருப்பத்தை தெரிவித்து அனுமதி கேட்க சொல்லி சென்னைக்கு அனுப்பி வைத்தேன்.
அவர் சம்மதித்ததால் தான் தேஜா லட்சுமி சினிமாவில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ளார். ஒருவேளை மகள் நடிப்பதற்கு ஊர்வசி தடை போட்டிருந்தால் அதில் என்னால் குறுக்கிட்டிருக்க முடியாது. அந்த வகையில் மகளின் விருப்பம் அறிந்து செயல்பட்டு இருக்கிறார் ஊர்வசி” என்று பேசும்போதே கண்கலங்கினார் மனோஜ் கே ஜெயன். அருகில் அமர்ந்திருந்த அவரது மகள் தேஜா லட்சுமி தந்தையை சாந்தப்படுத்தினார்.