சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
திருமணம் ஆன பின் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான பேபி ஜான் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து அவர் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
புதியவர் சந்துரு இயக்கி உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஒரு வழியாக வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு டீசரையும் வெளியிட்டுள்ளனர்.