பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சிறப்பு வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
கூலி படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்ததும் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை தொடங்கப் போகிறார் லோகேஷ். அந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த டில்லி கேரக்டரை மீண்டும் கார்த்தி தொடரும் நிலையில், ஏற்கனவே தான் இயக்கிய விக்ரம் படத்தின் மூன்று கேரக்டர்களை இதில் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இப்படத்தில் கமல் நடித்த விக்ரம், விஜய் சேதுபதி நடித்த சந்தானம், சூர்யா நடித்த ரோலக்ஸ் ஆகிய மூன்று கேரக்டர்களும் கைதி 2 படத்தில் இடம் பெறப் போகிறதாம். அதேப்போல் இந்த படத்தில் அனுஷ்காவும் ஒரு லேடி டான் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.