தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன், நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடித்துள்ள படம் கண்ணப்பா. சிவ பக்தர் கண்ணப்ப நாயனரின் வாழ்க்கையை தழுவி புராண படமாக உருவாகி உள்ளது. மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்பாபு, சரத்குமார், பிரீத்தி முகுந்தன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக ஜுன் 27ல் ரிலீஸாகிறது.
மோகன்பாபுவின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிக்கு இந்த படத்தை போட்டு காண்பித்துள்ளார் விஷ்ணு மஞ்சு. அதுபற்றி, ‛‛கண்ணப்பா படத்தை ரஜினி பார்த்தார். படம் முடிந்ததும் என்னை இறுக்கமாக கட்டியணைத்து படம் நன்றாக உள்ளது, பிடித்தது என்றார். ஒரு நடிகராக இதற்காகத்தான் 22 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். சிவபெருமானின் மாயாஜாலத்தை இந்த உலகம் காண காத்திருக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.