சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கு திரையுலகில் அடுத்ததாக பான் இந்திய ரிலீஸ் ஆக மிகப்பெரிய வெளிஈட்டிற்கு தயாராகி வரும் படம் 'கண்ணப்பா'. முகேஷ் குமார் சிங் இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்க, மிக முக்கியமான வேடங்களில் நடிகர்கள் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். நடிகர் மோகன் பாபு இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் வெளியாவதை முன்னிட்டு இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார்.
அப்போது இப்போது பேசிய மோகன்லால், “மோகன்பாபு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும். அவருக்கு வில்லனாக நான் நடிக்க வேண்டும்” என்கிற தனது ஆசையை வெளிப்படுத்தினார். உடனே மோகன்பாபு, “இல்லை நீங்கள் ஹீரோவாக நடிக்கணும். நான் தான் உங்களுக்கு வில்லனாக நடிக்கணும்” என்று பதிலுக்கு கூறினார்.
உடனே மோகன்லால், “கிட்டத்தட்ட 560 படங்களில் நடித்து விட்டீர்கள். ஏன் உங்களுக்கு இப்படி வில்லனாக நடிக்கும் ஆசை ? அப்படி ஒருவேளை நீங்கள் என் படத்தில் வில்லனாக நடித்தே தீருவேன் என்றால் உங்களை முதல் காட்சியிலேயே சுட்டுக் கொன்று விடுவேன்” என்று ஜாலியாக கூறினார். மோகன்லால், மோகன்பாபு இருவரும் இணைந்து எந்த படத்தில் நடிக்காவிட்டாலும் கூட பல வருட காலம் நட்பு இவர்களுக்குள் உண்டு என்பதை இந்த நிகழ்வில் கண்கூடாக பார்க்க முடிந்தது.