Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்?

19 ஜூன், 2025 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Tak-Life---Karnataka-distributor-withdrawal
Advertisement

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'தக் லைப்' படம் ஜுன் 5ம் தேதி வெளியானது. கமல்ஹாசன் பேசிய கன்னட மொழி சர்ச்சையால் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அங்கு படத்தை வெளியிட அரசு ஒத்துழைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, படத்தின் கர்நாடகா உரிமையை வாங்கிய வினியோகஸ்தர் வெங்கடேஷ் கமலகர் படத்தை வெளியிடுவதிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “கன்னட மொழி பற்றியும், கன்னடர்களின் சென்டிமென்ட்டை புண்படுத்தும் விதமாக அமைந்த கமல்ஹாசன் பேச்சால் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது. இப்போது படத்தை வெளியிடுவது சரியான வியாபாரமாகவும் இருக்காது. அவரது முந்தைய படமான 'இந்தியன் 2' படம் கர்நாடகாவில் சரியாக ஓடவில்லை.

'விக்ரம்' படம் நன்றாக ஓடியது. படம் எப்படியிருக்கிறது என்பது தெரியாமல் ஓடிப் போய் படம் பார்க்கும் கமல் ரசிகர்கள் இங்கு இல்லை. படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அவரது படங்களின் வெற்றி அமையும். 'தக் லைப்' படம் நன்றாக இல்லை என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. அதனால், அதை வெளியிடுவது 'ரிஸ்க்' ஆனது. இது எங்களது தவறு அல்ல, லாபம் வருமா என்ற சந்தேகம் உள்ள நிலையில் தியேட்டர்காரர்களும் படத்தைத் திரையிடத் தயங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டதால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் பங்கு சதவீதத்தை மிகவும் குறைத்துக் கேட்கிறார்களாம். எனவே, தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வெங்கடேஷ் திருப்பிக் கேட்பதாகவும், தனக்கு சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட்டு படத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கட்டும் என்றும் சொல்லியிருப்பதாகத் தகவல்.

உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்தந்த ஊர்களில் உள்ள தியேட்டர்களைத் தொடர்பு கொண்டு கன்னட அமைப்புகள் படத்தை வெளியிட விருப்பமில்லை என்று சொல்ல வேண்டும் என அன்பான மிரட்டல் விடுப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குத்துச்சண்டை வீரராகிறார் மஹத்குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in