தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1945 முதல் 1950 வரை முன்னணி இயக்குனராக இருந்தவர் ஏ.எஸ்.ஏ.சாமி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஏ.சூசை அந்தோணிசாமி. கோவில்பட்டி அருகில் உள்ள குருவிக்குளம் என்னும் ஊரில் கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த சூசை அந்தோணிசாமி, இளம் பருவத்தில் படிப்பில் நன்கு கவனம் செலுத்தி, உயர்நிலைப் பள்ளிக்கல்வி முடித்துத் தேறினார். லண்டன் ஆக்ஸ்போர்டில் பி.ஏ.ஹானர்ஸ் படித்தார். அந்தக் காலத்தில் உயர்ந்து படிப்பு இது.
ஆங்கில இலக்கியத்தில் ஆர்வமிக்க சாமி, ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் படித்தார். பின்னர் தானும் அதுபோன்ற நாடகங்களை எழுத விரும்பினார். முதலில் வானொலி நிலையத்திற்கு ஒலி நாடகங்களை எழுதிக் கொடுத்தார். அவரது நாடகங்களை கேட்ட டி.கே.சண்முகம் சகோதரர்கள் அவர் எழுதிய 'பில்ஹணன்' என்ற நாடகத்தை அதனை மேடை நாடகமாக எழுதி கேட்டனர். நாடகம் அரங்கேற்றம் ஆகி பாராட்டைப் பெற்றது. இந்த நாடகம்தான் சாமியின் சினிமா எண்ட்ரிக்கு பாதை போட்டது.
இந்த நாடகம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது திரைக்கதை வசனத்தை சாமியே எழுதினார். பின்னர் 1946ல் 'வால்மீகி' படத்திற்கு வசனம் எழுதினார். 'ஸ்ரீமுருகன்' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். இந்த படத்தில் நடித்த எம்ஜிஆருக்கு நெருக்கமான நண்பர் ஆனார். நான் இயக்கும் முதல் படத்தில் நீதான் ஹீரோ என்று எம்ஜிஆருக்கு வாக்களித்தார்.
ஸ்ரீமுருகன் வெளியாகி வெற்றி பெற்றதைத்தொடர்ந்து அதுவரையில் எழுத்தாளராக மட்டுமே இருந்து வந்த ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனரானார். அவர் இயக்கிய முதல் படம் 'ராஜகுமாரி'. இந்த படத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற கேள்வி எழுந்தபோது 'எம்.ஜி.ராமச்சந்திரன் பொருத்தமாக இருப்பார்' என்று சாமி கூறினார். அதில் தயாரிப்பாளர்களுக்கு முதலில் உடன்பாடு இல்லை. ராமச்சந்திரன் ராசி இல்லாதவர். அவருடைய முகவாயின் கீழே ஒரு பள்ளம் இருக்கிறது. அதனால் அவர் முகம் அழகாக இல்லை. ஆகவே ஹீரோ வேஷத்திற்கு அவர் பொருத்தமாக இருக்கமாட்டார் என்றெல்லாம் கூறினார்கள்.
'இந்தப்படத்திற்கு ராமச்சந்திரன்தான் ஹீரோ. இல்லாவிடில் இந்தப் படத்தை நான் இயக்கப்போவது இல்லை', என்று ஏ.எஸ்.ஏ.சாமி திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். தனது 30வது வயதில் இந்த படத்தில் எம்ஜிஆர் ஹீரோவானார். அவருக்கு ஜோடியாக மாலதி நடித்தார். இதற்கு நன்றி கடனாக எம்.ஜி.ஆர் அவரை தனது சொந்த அண்ணனாக கருதி மரியாதை செய்து வந்தார். மக்கள் திலகம் எம்ஜிஆரை வாடா ராமச்சந்திரா, போடா ராமச்சந்திரா என்று ஒருமையில் பெயர் சொல்லி அழைத்து இயக்குனரும் சாமியே ஆவார்.