நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'தொடரும்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் நடித்துள்ள 'ஹிருதயபூர்வம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கண்ணப்பா' படமும் வரும் ஜூன் 27ல் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு பக்கம் இருக்க மோகன்லால், மம்முட்டி இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த வரும் புதிய படம் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் எட்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெறத் துவங்கியுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் மோகன்லால் இலங்கை கிளம்பி சென்றார். அங்கே அவருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல நேற்று நடைபெற்ற இலங்கை பார்லிமென்டில் நிகழ்வுகளை நேரில் பார்க்கும் விதமாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மோகன்லால். பார்லிமென்டில் அவர் பெயர் சொல்லப்பட்டு அவருக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமர சூர்யா, சபாநாயகர் டாக்டர் ஜெகத் விக்ரமாநாயகெ, துணை சபாநாயகர் டாக்டர் ரிஷ்வி சாலிஹ் மற்றும் பார்லிமென்டில் பொது செயலாளர் குஸாணி மோகனதீரா ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மோகன்லால்.