மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி 'தக்லைப்' படத்தில் இணைந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தோல்வி குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், ''எங்களது கூட்டணியில் நாயகன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதனால் அவர்கள் இந்த தக்லைப் படத்தை இன்னொரு நாயகனாகவே எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் நாயகன் பாணியில் ஒரு படம் எடுக்க விரும்பவில்லை. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை கொடுப்பதற்கே திட்டமிட்டோம். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரியாக இருக்க, நாங்கள் இன்னொரு மாதிரியாக இந்த தக்லைப் படத்தை கொடுத்திருந்தோம். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. படத்தின் தோல்விக்கு அதுதான் காரணம்.
அவர்கள் நாயகனை கருத்தில் கொள்ளாமல் இந்த தக்லைப் படத்தை பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பிடித்திருக்கும். என்றாலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் இந்த படத்தை கொடுக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறி உள்ளார் மணிரத்னம்.