வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் சினிமாவில் நடிப்பவர்களுக்கு பாலிவுட்டில் நடிக்க வேண்டும். அடுத்து ஹாலிவுட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். 2012ம் ஆண்டு போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வரலட்சுமி. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்கள் ஹிந்தியில் டப்பாகி ஓடிடியில், டிவியில் வெளியாகி உள்ளது. இப்போது விஜய்சேதுபதி மகன் நடிக்கும் பீனிக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 'RIZANA-A Caged Bird' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் அவர் இணைந்து நடிக்கிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. 'RIZANA-A Caged Bird' திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
இந்தப் படம் பற்றி வரலட்சுமி கூறியது “அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படம் 'ஸ்கார் ப்ரம் தி லயன் கிங்'. எந்தளவுக்கு பிடிக்கும் என்றால், அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த கிங்கிற்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார்! அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம்.
ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்படும் நடிகர். இலங்கையிலும் உலகெங்கிலும் திரைப்பட உருவாக்கத்தின் முகத்தை மாற்றிய முன்னோடியான சந்திரன் ருட்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை! சர்வதேச திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார்.