சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படங்களை எடுத்து அவற்றை பான் இந்தியா வெளியீடாக ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து வெளியிடுகிறோம் என்பது ஒரு டிரென்ட் ஆகியுள்ளது. தனுஷைத் தொடர்ந்து அதில் சூர்யா, கார்த்தி ஆகியோரும் அந்த டிரென்ட்டில் சிக்கியுள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு இரு மொழிப் படங்கள் என்று சொன்னாலும் அந்தப் படங்களைத் தயாரிப்பது தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குவது தெலுங்கு இயக்குனர் என்பதால் அவர்களது தெலுங்கு ஸ்டைலில்தான் படங்களை உருவாக்குகிறார்கள்.
தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'குபேரா' படம் அந்த ஸ்டைலில்தான் அமைந்தது. ஆனால், தமிழில் விமர்சன ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பு பெற்றாலும் வியாபார ரீதியிலும் தோல்வியைத் தான் தழுவியுள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். தெலுங்கில் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
சூர்யா அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். கார்த்தி அடுத்து 'ஹிட் 4' படத்தில் நடிக்கப் போகிறார். இருந்தாலும் கார்த்தி ஏற்கெனவே தமிழ், தெலுங்கில் தயாராகி வெளிவந்த 'தோழா' படத்தில் தப்பித்தவர்.
தெலுங்கில் வரவேற்பு பெற்று அங்கு ஒரு மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக தமிழ் நடிகர்கள் இப்படி நடிக்கிறார்கள் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள்.