தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

காதலை மையப்படுத்தி வந்த படங்கள் ஏராளம். காதலர்களைச் சேர்த்து வைப்பதற்குப் போராடிய படங்களும் நிறைய உண்டு. இந்த இரண்டையும் மையப்படுத்தி வெளிவந்த படம் தான் 'வைதேகி காத்திருந்தாள்'. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கும் படமென்றால் மென்மையான கதை, வலுவான திரைக்கதை, சிரிக்க வைக்கும் காட்சிகள், சென்டிமெண்ட் சீன்கள், இசைக்கு முக்கியத்துவம் என கலந்துகட்டி இருக்கும். இதுவும் அப்படியான படம் தான்.
தனது அடுத்த படத்திற்கு இளையராஜாவை அணுகினார் ஆர்.சுந்தர்ராஜன். அப்போது இளையராஜா "வெவ்வேறு படங்களுக்கு தயார் செய்த 6 பாட்டு தரேன். அதற்கேற்றவாறு ஒரு கதையை தயார் செய்து கொள்" என்று கூறிவிட்டார். அப்படி பாடலுக்காக உருவான கதை தான் இந்த படம். 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு', 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ', 'மேகம் கருக்கையிலே', 'அழகு மலராட', 'காத்திருந்து காத்திருந்து...' என அத்தனை பாடல்களும் ஹிட்டானது.
ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த்தை பெர்பார்மன்ஸ் ஹீரோவாக அடையாளம் காட்டியது. வெள்ளச்சாமியாக விஜயகாந்த், காதலி வைதேகி ஆக பரிமளா, விதவை வைதேகி ஆக ரேவதி நடித்தனர். கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ஹிட்டானது.
1984ம் ஆண்டு தீபாவளியன்று இப்படம் வெளியானது. தீபாவளிப் படங்களில், நல்ல கதையாலும், சிறப்பான நடிப்பாலும், காமெடியாலும் முக்கியமாக இளையராஜாவின் இசையாலும், வெள்ளிவிழா படமானது.