தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட்டை போல தென்னிந்தியாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை தமிழுக்கு கமல், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் கிச்சா சுதீப் என ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான நட்சத்திரங்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் கடந்தாண்டு கமல் விலகியதை அடுத்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கன்னட திரையுலகில் பிரபல நடிகரான கிச்சா சுதீப் கடந்த 11 வருடங்களாக கன்னடத்தில் பிக்பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் கடந்த வருட 11வது சீசன் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே இந்த ஒரு சீசன் மட்டுமே தொகுத்து வழங்கப் போவதாகவும், அதன் பிறகு இதிலிருந்து விலகி நடிப்பு பயணத்தில் சில புதிய விஷயங்களை மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார். அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்வி கடந்த வருடத்தில் இருந்து ரசிகர்களிடம் இருந்து வந்தது. அதே சமயம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு சுதீப்பின் பங்களிப்பு மிகப்பெரிய காரணம் என்பதால் அவரை விடவும் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு மனது இல்லை.
அதனால் ஒரே ஒரு நிபந்தனையுடன் சுதீப் இந்த நிகழ்ச்சியை இன்னும் நான்கு வருடங்களுக்கு நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த 2025ம் வருடத்தில் தன்னுடைய 'பில்லா ரங்கா பாஷா' திரைப்படம் வெளியாகியே ஆக வேண்டும் என்பதால் அதற்கான படப்பிடிப்பு பணிகளில் தான் ஈடுபட உள்ளதாகவும் அதனால் பிக்பாஸ் 12வது சீசன் ஆரம்பிக்க திட்டமிட்ட தேதியில் இருந்து நான்கு வாரங்கள் கழித்து, அதை துவங்குவதானால், தான் மீண்டும் தொகுத்து வழங்க தயார் என்று அவர் கூறியதாகவும் அதற்கு நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகமும் ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிகிறது.