சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ என்ற படம் ஜூலை நான்காம் தேதியான நாளை வெளியாகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் ராம். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது மாரி செல்வராஜ் இயக்கி உள்ள பைசன் படம் குறித்தது ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறும்போது, ‛‛மாரி செல்வராஜனின் வெற்றி என்னுடைய வெற்றிதான். இது எங்களது குழுவின் வெற்றி. என்றாலும் அவரது இந்த வெற்றி போதாது என்றுதான் சொல்லுவேன். அவர் பான் இந்தியா இயக்குனராக வேண்டும். அதற்கான அனைத்து தகுதியும் அவரிடத்தில் உள்ளது. பாரதிராஜாவுக்கு பிறகு அதிவேகமாக படம் எடுக்கக் கூடியவர் என்றால் அது மாரி செல்வராஜ்தான். அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்த நிலையில், பின்னர் வாழை படம் அதைவிட பிடித்தது.
ஆனால் இப்போது பைசன் படத்தை பார்த்த பிறகு வாழையை விட இந்த படம் என்னை அதிகமாக கவர்ந்துள்ளது. அந்த அளவுக்கு இந்த படத்தில் சிக்கலான உணர்வுகளை கதாபாத்திரங்களாக வைத்து மிக நேர்த்தியாக படத்தை இயக்கியிருக்கிறார். எதிர்காலத்தில் மாரி செல்வராஜ் பான் இந்தியா இயக்குனராகி ஷாருக்கான், அமீர்கான் போன்றவர்களை இயக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார் ராம்.