பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு |
பேரன்பு திரைப்படத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு ராமின் டைரக்ஷனில் தற்போது வெளியாகியுள்ள படம் பறந்து போ. மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அஞ்சலி ஒரு கதாநாயகியாகவும், மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை கிரேஸ் ஆண்டனி இன்னொரு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் மூலம் கிரேஸ் ஆண்டனி தமிழுக்கு வந்துள்ளார். இவர் மலையாளத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து 2021ல் நிவின்பாலி ஜோடியாக நடித்த கனகம் காமினி கலகம் என்கிற படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். அதன் பிறகு மம்முட்டியுடன் ரோஷாக், ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பறந்து போ படத்தில் இவரது நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராம், கிரேஸ் ஆண்டனி குறித்து கூறும்போது, “இந்த படத்தில் நடித்த சிவாவுக்கு 4 நிமிடத்தில் கதை சொன்னேன். மலையாள நடிகரான அஜூ வர்கீஸுக்கு ஒரு நிமிடம் சொன்னதுமே அவர் ஒகே என்று சொல்லிவிட்டார்.. அவ்வளவு ஏன் மம்முட்டிக்கு கூட பேரன்பு படத்தின் கதையை ஐந்து நிமிடத்திலேயே சொல்லி விட்டேன். ஆனால் கிரேஸ் ஆண்டனிக்கு இந்த கதையை சொல்ல எனக்கு 20 நிமிடம் பிடித்தது. அந்த அளவுக்கு விலாவாரியாக கேட்டுக் கொண்டார். ஆனால் படப்பிடிப்பில் அவர் தொடர்ந்து நடிப்பதை பார்த்தபோது அவருக்கு இன்னும் சில காட்சிகளை கூடுதலாக சேர்க்கலாமோ என்று கூட எண்ணம் தோன்றியது. அந்த அளவுக்கு அவரது நடிப்பால் நான் கவரப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் கிரேஸ் ஆண்டனி குறித்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் படத்தில் அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள நடிகர் அஜூ வர்கீஸும் இவரும் கடந்த வருடம் ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் நுணக்குழி படத்தில் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர். இந்த பறந்து போ படத்தின் மூலம் இருவரும் ஒன்றாகவே தமிழ் திரை உலகில் அறிமுகமாகி இருக்கின்றனர்.