2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி |

திரையுலகில் பிரபலமாக இருப்பவர்களின் சோசியல் மீடியா கணக்குகள் அவ்வப்போது சில ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுவதும் அதில் தேவையற்ற பதிவுகள் வெளியாகி சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு சில நேரம் சிக்கலை ஏற்படுத்துவதும் வாடிக்கையாக தொடர்ந்து வருகிறது. இதனாலேயே தங்களது சோசியல் மீடியா கணக்கு இப்படி ஹேக் செய்யப்படும்போது அது குறித்து ஒரு எச்சரிக்கை அறிவிப்பை சம்பந்தப்பட்ட பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரிவித்து விடுகின்றனர்.
அந்த வகையில் பிரபல மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு கேக் செய்யப்பட்டதாக நேற்று அவர் தனது முகநூல் பக்கம் மூலமாக தெரிவித்தார்.. இந்த பிரச்சனையை சரி செய்ய தனது குழுவினர் முயற்சி செய்து வருவதாகவும் அதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் செய்திகளை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மீட்கப்பட்டது என்று ஒரு தகவலை அப்டேட் செய்துள்ளார் உன்னி முகுந்தன். மேலும் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் செய்திகளுக்கு பதில் அளிப்பதும் அல்லது லிங்க்குகளை கிளிக் செய்வதும் அவை உங்களது அக்கவுண்டை ஹேக் செய்ய வழிவகுத்து விடும் அபாயம் இருக்கிறது என்கிற எச்சரிக்கையை மீண்டும் ரசிகர்களுக்கு விடுத்துள்ளார் உன்னி முகுந்தன்.