தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகில் 90களில் புகழ்பெற்ற காமெடி நடிகராக வலம் வந்தவர் ஹரிஸ்ரீ அசோகன். மலையாள சினிமாவின் வடிவேலு என்று அழைக்கப்படும் அளவிற்கு பல படங்களில் தனியாகவும் முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 1998ல் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான பஞ்சாபி ஹவுஸ் திரைப்படத்தில் ஹரிஸ்ரீ அசோகன் காமெடி கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்படுகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நடிகை வித்யா பாலன் இந்த பஞ்சாபி கவுஸிசில் ஹரிஸ்ரீ அசோகன் இடம்பெற்ற ஒரு காமெடி காட்சியை அவரைப் போலவே இமிடேட் செய்து வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலாகி ஹரிஸ்ரீ அசோகனுக்கும் சில நண்பர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. அதைப் பார்த்த ஹரிஸ்ரீ அசோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, ''தன்னைப் போன்ற ஒரு நடிகரின் காட்சியை கூட மிகவும் பர்பெக்டாக இமிடேட் செய்து நடித்துள்ளார் வித்யா பாலன். என் குடும்பத்துடன் இந்த வீடியோவை பார்த்து ரசித்தேன். அவருக்கு என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார்.