சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ள படம் ‛டிரண்டிங்'. என்.சிவராஜ் இயக்கி உள்ளார். கலையரசன் கதாநாயகனாகவும், பிரியாலயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்ஜியா, சிவன்யா பிரியங்கா, கவுரி, பாலாஜி, தியாகராஜன், தயாளன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரவீன் பாலு இசை அமைத்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
கலையரசன் கூறும்போது ''சமூக வலைதளத்தில் பிரபலமாக எந்த எல்லைக்கும் செல்லலாம் என நினைக்கும் தம்பதி பற்றிய கதை இது. வாழ்க்கையின் அழகான விஷயங்களை, தருணங்களை சோஷியல் மீடியா எப்படியெல்லாம் அழிக்கிறது? என்பது கதைக்களம். கடைசி 15 நிமிடங்கள் வரும் 'கிளைமேக்ஸ்' காட்சி, அனைவரையும் சீட்டின் நுனியில் அமரவைக்கும்" என்றார்.
பின்னர் கலையரசனிடம் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது ''இது பொய்யான தகவல். எனக்கு மேனேஜரே கிடையாது. நான் அவ்வளவு சம்பளம் வாங்குவதும் இல்லை. எனக்கு அவ்வளவு பெரிய தொகையை யாரும் கொடுப்பதும் கிடையாது. மாதம் ரூ.30,000 சம்பளம் கிடைக்குமா? என்று இருந்த நான், இன்று ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறேன்.
நல்ல படங்களுக்காக எனது சம்பளத்தையும் குறைத்துக் கொள்கிறேன். ஓரிரு படங்களில் சம்பளம் கூட இன்னும் தராமல் இருக்கிறார்கள். அந்த பணம் கிடைத்தால் போதும், அதை கொண்டு நானே இரு படங்கள் தயாரிப்பேன்'' என்றார்.