வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
புதிய பாடல்கள் வெளியாகும் போது 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வைகள், எவ்வளவு நாட்களில் 100 மில்லியன் பார்வைகள் கடக்கிறது என அந்தப் பாடலில் இடம் பெறும் நட்சத்திரங்களின் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
ரஜினி நடிக்கும் படத்தில் முன்னணி கதாநாயகிகள் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் டிரெண்ட் புதிதல்ல. 'சிவாஜி' படத்தில் கூட 'பல்லேலக்கா' பாடலுக்காக நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். 'ஜெயிலர்' படத்தில் 'காவாலா' பாடலுக்கு தமன்னா நடனமாடியது பரபரப்பாகப் பேசப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்பாடல் பற்றி ரஜினிகாந்த் பேசியதும் ஹைலைட்டாக அமைந்தது.
24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்ற அந்தப் பாடல் தற்போது யு டியூப் தளத்தில் அப்பாடலின் முழு வீடியோ 344 மில்லியன் பார்வைகளையும், லிரிக் வீடியோ 248 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. அந்த அளவிற்கு அப்பாடலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது.
நேற்று வெளியான 'கூலி' படத்தின் பாடலான 'மோனிகா' பாடலுக்கு முன்னணி கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார். அப்பாடல் தற்போது 6 மில்லியன் பார்வைகளை எட்டி உள்ளது. இன்னும் 2 மணி நேரத்திற்குள்ளாக 4 மில்லியன் பார்வைகளைப் பெற்றால்தான் 'காவாலா' பாடலின் சாதனையை முறியடிக்க முடியும்.
தமன்னா அளவிற்கு தமிழ் ரசிகர்களிடம் பூஜா பிரபலமில்லை என்றாலும் “பீஸ்ட் - அரபிக்குத்து,“, “ரெட்ரோ - கன்னிமா” பாடல் மூலம் இன்றைய ரசிகர்களைக் கவர்ந்தவர்.