வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் பாகுபலி. கடந்த 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில் 2017ல் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பாகுபலி திரைக்கு வந்து பத்தாம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‛பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில் இந்த படத்தை வரவேற்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து வெளியிட்டார்கள். குறிப்பாக, புக் மை ஷோ- வில் இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரே வாரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதோடு, இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 5 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், வெளியிட இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தியை அப்படக் குழு மறுத்துள்ளது.
இந்த படத்தின் நீளம் ஒரு ஐபிஎல் போட்டி நேரத்திற்கு சமமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். கூடிய சீக்கிரமே பாகுபலி தி எபிக் படத்தின் அதிகாரப்பூர்வ ரன்னிங் டைம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.