கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் |
நடிகர் அதர்வா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'டிஎன்ஏ' படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதர்வா நடித்து முடித்து கடந்த ஒரு வருடமாக கிடப்பில் கடந்த ‛தணல்' படத்தை தற்போது திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். இதில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த படத்தை அன்னை பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
'வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் 'தணல்'. இந்த படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். அஷ்வின் காக்குமானு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷாரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெற்று ரிலீஸூக்கு தயாராகவுள்ள இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.