கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதையடுத்து 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அந்த சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக விஜய் டிவி வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த போட்டியில் பங்கேற்க ஏராளமான பிரபலங்கள் விஜய் டிவிக்கு தங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை அனுப்பி வருவதாக கூறுகிறார்கள். அதனால் அடுத்த மாதத்தில் இருந்து பிக்பாஸ் சீசன்-9 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும் என்று கூறுகிறார்கள்.