தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு படம் வெளியானால் குறைந்தபட்சம் மறுநாள் தான் சக்சஸ் மீட் என தெலுங்குத் திரையுலகத்தில் கொண்டாடுவார்கள். ஆனால், நேற்று வெளியான 'ஹரிஹர வீரமல்லு' படத்திற்கு நேற்று மதியமே சக்சஸ் மீட் நடத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் நேற்று பான் இந்தியா படமாக இப்படம் வெளியானது. இப்படத்திற்காக கடந்த சில நாட்களாகவே புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தார் பவன் கல்யாண். ஒரு வழியாக சக்சஸ் மீட்டையும் நடத்தி தனது துணை முதல்வர் பணிகளை தொடர்வோம் என இந்தப் படத்திற்கான தனது பணியை நேற்றே முடித்துவிட்டார் என்கிறார்கள். இதோடு அவரது அடுத்த படத்திற்கு மட்டுமே அவர் மீண்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம், அல்லது கலந்து கொள்ளாமலும் போகலாம்.
“வழக்கமாக நான் சினிமா புரமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டேன். இதுதான் நான் முதன்முதலில் கலந்து கொள்ளும் சக்சஸ் மீட். துணை முதல்வராக இருப்பதால் படம் வெளியிடுவது எளிது என நினைத்திருந்தேன். ஆனால், கடந்த ஒரு வார காலமாக எனக்கு சரியான தூக்கமும் இல்லை. கடந்த 30 வருடங்களாக ஒரு நடிகராக நான் எப்படி இருந்தேன் எனது அனுபவம் என்ன என்பதை கடந்த இரண்டு நாட்களாக பேசி வந்தேன். என்னை எப்போதும் ஒரு ஹீரோ என நான் நினைத்ததில்லை. ஆனால், விதி என்னை ஹீரோவாகவும், அரசியல்வாதியாகவும் ஆக்கியது.
படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் வெளியிட காத்திருக்கிறேன்,” என்று பவன் கல்யாண் அவரது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.