பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? |
ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், ஆர்ஷாபைஜூ, காளிவெங்கட், வினோதினி நடிக்கும் படம் 'ஹவுஸ்மேட்ஸ்'. ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை சிவகார்த்திகயேன் புரொடக்சன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஏன் சொந்த பேனரில் ரிலீஸ் செய்கிறார் என்று விசாரித்தால், அதற்கான விடையை ஹீரோ தர்ஷனே சொல்லியிருக்கிறார்.
''இந்த படத்தை சிவகார்த்தியேன் பார்த்தார். அவருக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. படத்தின் சீன்கள், சில விஷயங்களை பற்றி என்னிடம் போனில் பேசிவிட்டு, இந்த படத்தை நாமதான் ரிலீஸ் பண்ணுறோம் என்றார். அவர் பேனர் ரிலீஸ் செய்வதால் படத்துக்கு தனி மவுசு ஏற்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் பார்த்தவர்கள் இது பேய் படமா என கேட்கிறார்கள். நாங்கள் சில விஷயத்தை வெளியே சொல்ல முடியாது. அதை சஸ்பென்ஸ் ஆக வைத்து இருக்கிறோம். படத்தில் வருவது பேயா? வேறு எதுவுமா என்பது படம் ரிலீஸ் அன்று தெரிந்துவிடும். மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'தொடரும்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த அர்ஷா ஹீரோயின். காளிவெங்கட், வினோதினி கணவன், மனைவியாக வருகிறார்கள்'' என்றார்.
சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து, ''கண்டிப்பாக, இந்த படம் வெற்றி பெறும். படத்தின் எழுத்து பேசப்படும். காளிவெங்கட் கலக்கியிருக்கிறார். என்னால் படத்தின் ஜானரை இப்போது சொல்ல முடியாது. எனக்கும் சிவகார்த்திகேயன் புரொடக்சனுக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த கம்பெனி தயாரித்த கனா படத்தில் உதவிஇயக்குனராக பணியாற்றி சம்பளம் வாங்கி இருக்கிறேன்'' என்றார். தான் ஹீரோவாக நடிக்கும் பராசக்தி படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இந்த பட நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவில்லையாம்.