வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
1950களில் தமிழ் திரையுலகிற்கு திடீர் வரவாக வந்தவர்தான் எம் எச் எம் மூணாஸ் என்னும் படத் தயாரிப்பாளர். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தயாரித்திருந்த திரைப்படம்தான் “உலகம்”. 1953ல் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இவர் செய்திருந்த பத்திரிகை விளம்பரம் சுவாரஸ்யமான ஒன்று. விளம்பர மன்னன் என்று அழைக்கப்படும் 'ஜெமினி' எஸ் எஸ் வாசனையே மிஞ்சும் வண்ணம் தனது “உலகம்” படம் பற்றி பிரமாண்டமான விளம்பரங்களைப் பல மாதங்கள் செய்து வந்தார்.
பார்வையாளர்களுக்கு விமர்சனப் போட்டி ஒன்றை அறிவித்து, அதற்கு பரிசுத் தொகை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் நுழைவுச் சீட்டில் மொத்தம் ஆறு கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான சரியான பதிலை எழுதுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 25,000, இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000, மூன்றாவது பரிசாக ரூபாய் 10,000 என அறிவிக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய தொகையாகப் பார்க்கப்பட்ட அந்தக் காலங்களிலேயே இப்படி ஒரு விளம்பரத்தைச் செய்து அசத்தியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் மூணாஸ்.
1953ம் ஆண்டு ஜுலை 10 அன்று வெளிவந்த “உலகம்” திரைப்படம், தயாரிப்பாளர் மூணாஸின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், வணிக ரீதியாக வெற்றியைப் பெறத் தவறியது. விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, ரசிகர்கள் விமர்சனத்துக்காகப் படத்தைப் பார்க்கச் சென்றபோது, படமே திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். சுருக்கிச் சொல்லவே முடியாத அளவிற்கு, மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஓடக் கூடிய இந்த “உலகம்” திரைப்படத்தின் கதையில், ஈஸ்வர், எம் எஸ் குமரேசன், எம் வி ராஜம்மா, வி நாகையா, பி கே சரஸ்வதி, டி இ வரதன், எம் எஸ் திரௌபதி, பி எஸ் வீரப்பா ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தின் நடனங்களை குமாரி கமலாவும், லலிதா மற்றும் பத்மினியும் கவனித்திருந்தனர். பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தும், தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய இந்த “உலகம்” திரைப்படத்திற்கான விமர்சனப் போட்டியின் முடிவு வெளிவரவுமில்லை, யாருக்கும் பரிசளிக்கவும் இல்லை.