தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

அறிமுகமான புதிதில் மளமளவென நடித்த பிந்து மாதவி பிறகு ஆண்டுக்கு ஒரு படம் அல்லது இரண்டு படங்களில் நடித்தார். பின்னர் 4 வருடங்கள் இடைவெளிவிட்டு கடைசியாக 'கழுகு 2' படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடித்த 'மாயன்' படம் வெளியானது. தற்போது யாருக்கும் அஞ்சேல், பகைவனுக்கு அருள்வாய் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் ஜி.வி.பிரகாசுடன் இணைந்து நடித்துள்ள 'பிளாக்மெயில்' படம் அடுத்து வெளிவருகிறது. படத்தின் நாயகி தேஜு அஸ்வினி என்றாலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் பிந்து மாதவி.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தை பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு.மாறன் பிளாக்மெயில் கதையை விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனடியாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. இது எனக்காகவே காத்திருந்த ஒரு கதாபாத்திரம் போல உணர்ந்தேன்.
உணர்வும் ஆழமும் கலந்து அவர் உருவாக்கிய என் கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய பொறுப்பையும் தந்தது. முக்கியமான பல கதாபாத்திரங்களுடன் இணைந்து எனது காட்சிகள் வந்திருக்கின்றன.
ஜி.வி.பிரகாஷ்குமார் போன்ற அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருடன் பணியாற்றிய அனுபவம் அருமை. தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் என்கிறார்.