ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
ஒரு படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கி விட்டால் அந்த படத்தை குழந்தைகள் பார்க்க அனுமதிக்ககூடாது என்று பொருள். ரஜினிக்கு நிறைய குழந்தை ரசிகர்கள் இருப்பதால் படத்தை இயக்கும் இயக்குனர்கள் 'ஏ' சான்றிதழ் வராதவாறு படத்தின் காட்சிகளை அமைப்பார்கள். ஒரு சில படங்களில் தணிக்கையின் போது சில காட்சிகள் நீக்கப்பட்டு 'ஏ' சான்றிதழ் தவிர்க்கப்பட்ட படங்களும் உண்டு.
சமீபத்தில் வெளியான 'கூலி' படத்திற்கு தணிக்கை குழு ‛ஏ' சான்றிதழ் கொடுத்தது. தயாரிப்பு தரப்பு எவ்வளவோ முட்டி மோதியும் தணிக்கை குழு அசைந்து கொடுக்கவில்லை. குடும்பத்தோடு படத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் தியேட்டரில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் 'கூலி' மட்டுமே ரஜினி நடித்த ஏ படம் அல்ல அதற்கு முன் பல படங்கள் வெளிவந்துள்ளது. புவனா ஒரு கேள்விக்குறி (1977), காயத்ரி (1977), இளமை ஊஞ்சல் ஆடுகிறது (1978), அவள் அப்படித்தான் (1978), என் கேள்விக்கு என்ன பதில் (1978), காளி (1980), நெற்றிக்கண் (1981), ரங்கா (1982), புதுக்கவிதை (1982), மூன்று முகம் (1982), பாயும் புலி (1983), சிவப்பு சூரியன் (1983), கை கொடுக்கும் கை (1984), நான் மகான் அல்ல (1984), நான் சிகப்பு மனிதன் (1985), உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985), விடுதலை (1986), ஊர்க்காவலன் (1987), கொடி பறக்குது (1988), சிவா (1989).
பெரும்பாலான படங்கள் கதை அமைப்பிற்காகவே 'ஏ' சான்றிதழ் பெற்றன. சில படங்கள் வன்முறை காட்சிகளுக்காக பெற்றது. 'கூலி' படத்திற்கு முந்தைய படங்களில் 'கூலி'யை விட அதிக வன்முறை காட்சிகள் இருந்தது. ஆனாலும் ஏனோ கூலிக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். இது ரஜினியே எதிர்பாராத ஒன்று.