தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களையும் இயக்கி, நடித்து வெற்றி பெற்றார் ராகவா லாரன்ஸ். இதில் 2020ம் ஆண்டில் காஞ்சனா படத்தை ஹிந்தியில் லட்சுமி என்ற பெயரில் ரீமேக் செய்தார் லாரன்ஸ். அந்தப் படத்தில் அக் ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்தார்கள். தற்போது காஞ்சனா படத்தின் நான்காவது பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில் பூஜா ஹெக்டே, ஹிந்தி நடிகை நோரா பதேஹி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
நோரா பதேஹி அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழில் காஞ்சனா-4 என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறது. அதனால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தங்கள் படங்களுக்கு என்னை ஹீரோயினாக புக் பண்ண ஆளாலுக்கு தேடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் நோரா பதேஹி.