சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகர் ரவிமோகன் ‛ரவிமோகன் ஸ்டூடியோஸ்' என்ற பெயரில் சொந்த பட நிறுவனத்தை இன்று துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: நான் கல்லூரி காலத்தில் ரவி மோகன், ஜெனிலியா படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன். மீண்டும் அவர்கள் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. ரவிமோகன் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். எனக்கும் நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி அதிகம். பல ஹீரோக்கள் பட நிறுவனம் தொடங்க வேண்டும். திறமைசாலிகளுக்கு களம் அமைத்து தர வேண்டும். அது அம்மா மாதிரியான பீலிங்.
இப்ப ஒரு படம் தயாரித்து கொண்டு இருக்கிறேன். அந்த படத்தை எடிட்டிங்கில் பார்த்து அவ்வளவு சந்தோசப்பட்டேன். தயாரிப்பு விஷயத்தில் நான் ரவிமோகனுக்கு சீனியர். என்னால் முடிந்த உதவிகளை வழங்க தயார். அவரின் இந்த கம்பெனியிலும் நடிக்க ரெடி. அவர் இன்றே அட்வான்ஸ் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன். பராசக்தி படத்தில் ரவியுடன் இணைந்து நடிக்கிறேன்..அவர் நிறைய பேசி இருக்கிறார். சுதா இயக்கும் அந்த ‛செட்' வேறு மாதிரி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் நடிகர் ரவி மோகன் தனது தாயாரை போற்றும் விதமாக ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கி, அந்தப் பாடலுக்கான வரிகளை அவரே எழுதியிருந்தார். நடிகர் ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா அந்த பாடலை பாடியுள்ளார். பின்னர் விழாவில் பாடகி கெனிஷா பேசுகையில், ‛‛ரவி மோகன் ஸ்டுடியோவில் நானும் ஒரு பங்காக இருப்பது பெருமையாக இருக்கு. ரவி எனக்கு அவரது அம்மா, அண்ணன் என்று நல்ல சொந்தங்களை கொடுத்து உள்ளார். ரவி என்ன சோகம் இருந்தாலும் வெளியில் சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். கஷ்டத்தில் வரவர்களுக்கு துணை நிற்கிறீர்கள். அவரை கடவுளாக பார்க்கிறேன்'' என்றார்.