லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு திரை உலகில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அதிக அளவில் காதல் கிசுகிசுக்களில் சிக்கி, ஆனால் அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் எந்த மறுப்பும் சொல்லாமல் ஜாலியாக வலம்வரும் ஜோடி தான் விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும். கிட்டத்தட்ட இவர்கள் காதலிப்பது பல்வேறு நிகழ்வுகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது என்றே சொல்லலாம். இந்த நிலையில் தான் சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற 43வது இந்தியா டே நிகழ்ச்சியில் ‛கிராண்ட் மார்ஷல்ஸ்' என்கிற சிறப்பு விருந்தினர்களாக இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்காவிலேயே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இவர்கள் ஒன்றாக பங்கேற்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாகவே ஹைதராபாத் திரும்பியுள்ளனர். ஹைதராபாத் விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் தங்களது முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி அதேசமயம் ரசிகர்களின் தொந்தரவு எதுவும் இல்லாமல் ஹாயாக பேசிக்கொண்டே நடந்து செல்வது போன்று ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.