தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது இயக்கி உள்ள படம் 'மனுஷி'. இதில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். போலீஸ் லாக் அப்பில் ஒரு இளம் அனுபவிக்கும் சித்ரவதைகளே படத்தின் கதை. இந்தப்படம் தணிக்கைக்கு சென்றபோது படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறி, இப்படத்துக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதபதி படத்தை பார்த்தார். பின்னர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் “மனுஷி படத்தில் கடவுள், அறிவியல் நம்பிக்கை, சித்தாந்தம், அடையாளம் ஆகியவை குறித்து வெளிப்படையான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளது. சென்சார் போர்டு நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காட்சிகளை நீக்க வேண்டாம். ஆனால் சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும். காட்சிகள், வசனங்களை மாற்றியமைத்து 2 வாரங்களில் சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். சென்சார் போர்டு 2 வாரங்களில் பரிசீலித்து உரிய சான்றிதழை வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.