பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு |
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த்ராஜ், ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வா வாத்தியார்'. எம்.ஜி.ஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்த படம் ஒரு பேண்டஸி கதை களத்தில் உருவாகியுள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 160 நாட்கள் நடைபெற்றது . இதற்கிடையில் இந்த படத்திற்கு பண சிக்கல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர். சமீபத்தில் பிரச்னைகள் முடிவடைந்தது மீதமுள்ள படப்பிடிப்பை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த படத்தை இவ்வருட டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைபற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த முறை உறுதியாக திரைக்கு வரும் என்கிறார்கள்.