பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரவிச்சந்திரன். பொய்முகங்கள். பருவராகம் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்தார். ரஜினிக்கு மிக நெருக்கமான நண்பர்.
தமிழில் ரஜினி நடித்த 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' படத்தை தயாரித்து, இயக்கினார். இதே படத்தை 'சாந்தி கிராந்தி' என்ற பெயரில் தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் இயக்கி வெளியிட்டார். அவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 3 மொழிகளிலும் வெற்றி பெற்ற படம் இது. ஹிந்தி, தெலுங்கு பதிப்பில் நகார்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்தார். கன்னட படதிப்பில் ரவிசந்திரன் முக்கிய கேரக்டரில் நடித்தார், இவைகளில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
சிவாஜி, ரஜினி நடித்த 'படிக்காதவன்' படத்தை தயாரித்தார். ஹிந்தியில் வெளிவந்த 'கவுட் டீர்' என்ற படத்தின் ரீமேக் இது. இதனை ராஜசேகர் இயக்கினார், அம்பிகா, ரம்யா கிருஷ்ணன், ஜெய்சங்கர், விஜய்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படம் பெரிய வெற்றி பெற்று ரவிச்சந்திரனுக்கு பெரும் லாபத்தை கொடுத்தது. 'என் கடன்களை அடைத்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தவன் படிக்காதவன்தான்' என்று பின்னாளில் பல நேர்காணல்களில் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.